மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு


மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 26 May 2023 12:15 AM IST (Updated: 26 May 2023 2:40 PM IST)
t-max-icont-min-icon

மின்சாரம் தாக்கி தொழிலாளி இறந்தார்.

சிவகங்கை

காரைக்குடி

சாக்கோட்டை அருகே மணியாரம்பட்டியை சேர்ந்தவர் சபரிநாதன் (வயது 19). இவர் தனது சித்தப்பா உடன் கோவில் திருவிழாவில் மைக் செட் போடும் வேலைக்கு சென்றார். திருவிழா முடிந்ததும் சபரிநாதன் அலங்கார விளக்குகளை கழட்டும்போது மின்சாரம் தாக்கி மயக்கமடைந்தார். உடனடியாக அவர் புதுவயல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து சாக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story