கோழிப்பண்ணையில் தவறி விழுந்த தொழிலாளி சாவு


கோழிப்பண்ணையில் தவறி விழுந்த தொழிலாளி சாவு
x

கோழிப்பண்ணையில் தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்தார்.

திருச்சி

முசிறி:

முசிறி அருகே உள்ள சேருகுடி கேனிப்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் சண்முகராஜ்(வயது 42). இவர் முசிறி பகுதியில் இயங்கி வரும் தனியார் கோழிப்பண்ணையில் கூலித்தொழிலாளியாக வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று இவர் கோழிப்பண்ணையில் தீவன கொப்பரையில் தீவனத்தை நிரப்பும் பணியில் ஈடுபட்டபோது, தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவரை சக பணியாளர்கள் மீட்டு முசிறி கைகாட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக இறந்தார்.

இது பற்றி அறிந்த அவரது உறவினர்கள் அவரது உடலை வாங்க மறுத்ததோடு, சாலை மறியல் ஈடுபடப்போவதாக முசிறி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து உடனடியாக சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, சண்முகராஜின் உடலை கைப்பற்றி உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story