மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி


மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி
x

மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலியானார்.

புதுக்கோட்டை

கீரனூர்:

தஞ்சாவூர் மாவட்டம், அனைக்காடு ஊரை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 34). தொழிலாளி. இவரது மனைவி வினேகா (30). இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் பிரபாகரன் அடிக்கடி மது குடித்து விட்டு தகராறு செய்து வந்தார். இதனால் வினேகா கணவரிடம் கோபித்துக்கொண்டு கீரனூர் அருகே கனியாப்பட்டி கிராமத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இந்நிலையில் தீபாவளி அன்று மனைவி, குழந்தையை பார்ப்பதற்காக புத்தாடைகளை வாங்கிக் கொண்டு மது போதையில் மோட்டார் சைக்கிளை ஓட்டிக்கொண்டு பிரபாகரன் கனியாப்பட்டிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கீரனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிரபாகரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story