தொழிலாளி தீக்குளித்து தற்கொலை


தொழிலாளி தீக்குளித்து தற்கொலை
x

மேல்விஷாரத்தில் தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் பகுதியைச் சேர்ந்தவர் முஜிப். இவரது மகன் அமீத்பாஷா (வயது 19), தோல் கம்பெனியில் கூலி தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி மோஷினா என்ற மனைவி உள்ளார். இவர் குடும்பப் பிரச்சினை காரணமாக கடந்த 3 மாதங்களாக தாய் வீட்டில் வசித்து வருகிறார்.

அமீத்பாஷா செல்போன் வாங்கித் தரும்படி தனது அக்காவிடம் அடிக்கடி கேட்டு வந்துள்ளார். வாங்கி தரவில்லை என்றால் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொள்வேன் என மிரட்டி வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த மாதம் 30-ந் தேதி ஆண்ட்ராய்டு செல்போன் வாங்கித் தரும்படி தனது அக்காவிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் சாதாரண போன் கடனில் வாங்கிக் கொடுத்துள்ளார்.

இதில் மனவேதனை அடைந்த அமீத்பாஷா உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். உடனடியாக அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து ஆற்காடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story