தொழிலாளி தீக்குளித்து தற்கொலை


தொழிலாளி தீக்குளித்து தற்கொலை
x

நெல்லை அருகே தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

திருநெல்வேலி

நெல்லை அருகே சீவலப்பேரி வேளாளர் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவருடைய மகன் ஆறுமுகம் (வயது 43). இவர் அருகே உள்ள செங்கல் சூளையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி, குழந்தைகள் சென்னையில் வசித்து வருகிறார்கள். கடந்த சில நாட்களாக ஆறுமுகம் மனநலம் பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் காலையில் வீட்டில் இருந்த அவர் தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் பலத்த தீக்காயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து சீவலப்பேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story