வாழைத்தோட்டத்தில் தொழிலாளி தீக்குளித்து தற்கொலை
இரணியல் அருேக வாழைத்தோட்டத்தில் தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்து ெகாண்டார்.
திங்கள்சந்தை,
இரணியல் அருேக வாழைத்தோட்டத்தில் தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்து ெகாண்டார்.
வாழைத்தோட்டத்தில் பிணம்
இரணியல் அருகே உள்ள குந்தன்கோடு ஆலன்விளை பகுதியில் கிறிஸ்தவ ஆலயத்துக்கு சொந்தமான வாழைத்தோட்டம் உள்ளது. இங்கு முதியவர் ஒருவர் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். நேற்று மதியம் அவர் வாழைத்தோட்டத்தை பார்வையிட சென்ற போது ஒரு ஆண் பிணம் தீயில் கருகிய நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து இரணியல் ேபாலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து இறந்தவர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தினர்.
தீக்குளித்து தற்கொலை
அப்போது, பிணமாக கிடந்தவர் சரல்பகுதிைய சேர்ந்த முத்துபட்டு மகன் அசோக்குமார் (வயது 37) என்பது தெரிய வந்தது. இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. அந்த பகுதியில் மரப்பட்டறையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
அசோக்குமார் நேற்று மதியம் பட்டறையில் இருந்து மரங்களுக்கு பெயிண்ட் அடிக்க பயன்படுத்தும் 'டின்னர்' எனப்படும் எரிபொருளை எடுத்து சென்றுள்ளார். இந்தநிலையில் அவர் வாழைத்தோட்டத்தில் எரிந்த நிலையில் பிணமாக மீட்கப்பட்டார்.
இதனால் அவர் டின்னரை தன்மீது ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்ததாக தெரிகிறது. இதையடுத்து பிணத்தை போலீசார் கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் தற்கொலைக்கான காரணம் குறித்து இரணியல் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். வாழைத்தோட்டத்தில் தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.