தொழிலாளி தீக்குளிக்க முயற்சி:நிதி நிறுவன மேலாளர் உள்பட 4 பேர் மீது வழக்கு


தொழிலாளி தீக்குளிக்க முயற்சி:நிதி நிறுவன மேலாளர் உள்பட 4 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 30 Jan 2023 12:15 AM IST (Updated: 30 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தேனி தொழிலாளி தீக்குளிக்க முயற்சி எதிரொலியாக நிதி நிறுவன மேலாளர் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தேனி

தேனி அல்லிநகரத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 60). இவர் பழனிசெட்டிபட்டியில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் வீடு அடமானக் கடன் வாங்கி இருந்தார். அந்த கடனுக்கு அதிக வட்டி கேட்பதாகவும், நிதி நிறுவன ஊழியர்கள் கொலை மிரட்டல் விடுவதாகவும் கூறி கடந்த 27-ந்தேதி இரவில் அந்த நிதி நிறுவனத்துக்குள் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். பின்னர் சுப்பிரமணி சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் சுப்பிரமணி புகார் செய்தார். அதன்பேரில், அவரை ஆபாசமாக பேசி, கொலை மிரட்டல் விடுத்ததாக நிதி நிறுவனத்தின் மேலாளர் மணிகண்டன் மற்றும் ஊழியர்கள் 3 பேர் மீது பழனிசெட்டிபட்டி போலீசார் நேற்று முன்தினம் இரவு வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story