குண்டர் சட்டத்தில் தொழிலாளி கைது


குண்டர் சட்டத்தில் தொழிலாளி கைது
x

பந்தலூரில் 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்

நீலகிரி

பந்தலூர்

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் அப்பு (வயது 29). இவர் தனது குடும்பத்தினருடன் பந்தலூரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்து கூலி வேலை செய்து வந்தார். இந்தநிலையில் அப்பு 7 வயது சிறுமியை ஆசைவார்த்தை கூறி தனியாக அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். இந்த சம்பவத்தை வெளியே கூறினால் கொலை செய்து விடுவேன் என மிரட்டல் விடுத்து உள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தன் பேரில் எருமாடு போலீசார் அப்பு மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.

அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டருக்கு பரிந்துரை செய்யப்பட்டது. தொடர்ந்து நீலகிரி கலெக்டர் அம்ரித் அப்புவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத் மேற்பார்வையில் எருமாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா மற்றும் போலீசார் அப்புவை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர். கோவை மத்திய சிறையில் உள்ள அவரிடம், அதற்கான நகல் வழங்கப்பட்டது.


Next Story