போக்சோ சட்டத்தில் தொழிலாளி கைது


போக்சோ சட்டத்தில் தொழிலாளி கைது
x

திசையன்விளை அருகே சிறுமியிடம் பாலியல் தொந்தரவு செய்ததாக, போக்சோ சட்டத்தில் தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி

வள்ளியூர்:

திசையன்விளை அருகே ஆனைகுடியைச் சேர்ந்தவர் முத்து (வயது 35). கூலி தொழிலாளியான இவர் 5 வயது சிறுமிக்கு மிட்டாய் வாங்கி தருவதாக ஆசைவார்த்தை கூறி, அருகில் உள்ள தோட்டத்துக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. அப்போது சிறுமி கூச்சலிட்டதால் அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று முத்துவை கையும் களவுமாக பிடித்து திசையன்விளை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே போலீசார் விரைந்து சென்று முத்துவை பிடித்து விசாரணை நடத்தினர். இதுகுறித்து வள்ளியூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து முத்துவை கைது செய்தார். பின்னர் அவரை போலீசார் வள்ளியூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.


Next Story