2-வது நாளாக கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றினர்
நீடாமங்கலத்தில், வருவாய்த்துறை அலுவலர்கள் 2-வது நாளாக கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றினர்
திருவாரூர்
நீடாமங்கலம்:
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கான கூடுதல் பணியிடங்களை உடன் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நீடாமங்கலம் வட்டத்தில் நேற்று 2-வது நாளாக வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் கோரிக்கை அட்டைகள் அணிந்து பணியாற்றினர். இதற்கு தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க வட்ட செயலாளர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். வட்ட பொருளாளர் தங்கராஜ் முன்னிலை வகித்தார். இதில் நீடாமங்கலம் வட்டத்தில் உள்ள அனைத்து வருவாய்த்துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர். மேலும் கோரிக்கை அட்டைகளை அணிந்தபடி வருவாய்த்துறை அலுவலர்கள் பணியாற்றினர்.
Related Tags :
Next Story