முதுமக்கள் தாழிகளை ஆவணப்படுத்தும் பணிகள் தொடக்கம்


முதுமக்கள் தாழிகளை ஆவணப்படுத்தும் பணிகள் தொடக்கம்
x
தினத்தந்தி 12 Sept 2023 12:15 AM IST (Updated: 12 Sept 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

கொந்தகையில் 9-ம் கட்ட அகழாய்வில் கண்டுடெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழிகளை ஆவணப்படுத்தும் பணிகள் தொடங்கியது

சிவகங்கை

திருப்புவனம்

திருப்புவனம் யூனியனைச் சேர்ந்த கொந்தகையில் 9-ம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளின் போது 24 முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவைகளை லாவகமாக எடுக்க முதுமக்கள் தாழிகள் சுத்தப்படுத்தப்பட்டு வருகிறது. அதன் பின்பு உயரம், அகலம், பொருட்கள் உள்ள ஆழம் ஆகியவைகள் அறியப்படும். கடந்த 8-ம் கட்ட அகழாய்வின் போது 50-க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டது. அவற்றின் உள்ளே இருந்து மனித மண்டை ஓடு, கை, கால் எலும்புகள், விலா எலும்புகள், சிறிய மண்பானை, சிறிய மண்சட்டி போன்ற பொருட்கள் எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதேபோல் 9-ம் கட்ட அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட 24 முதுமக்கள் தாழிகளில் ஒன்று மட்டும் ஏற்கனவே திறக்கப்பட்டுள்ளது. திறக்கப்பட்ட முதுமக்கள் தாழியினுள் இருந்த மண்டை ஓடு, எலும்புகள் ஆகியவற்றை ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. தற்சமயம் மீதமுள்ள முதுமக்கள் தாழிகளை திறந்து உள்ளே உள்ள பொருட்களை எடுப்பதற்காக தொல்லியல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக முதுமக்கள் தாழிகள் ஆவணப்படுத்தும் பணியும் நடைபெற்று வருகிறது. மேலும் முதுமக்கள் தாழிகளின் மேலே உள்ள மண் பகுதிகளும் சுத்தப்படுத்தப்பட்டு வருகிறது. அகழாய்வுபணிகள் பெரும்பாலும் செப்டம்பர் மாதத்துடன் முடிவு பெறும். பிறகு மழைக்காலம் வந்துவிடுவதால் முதுமக்கள் தாழிகளை திறக்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த நான்கு கட்டங்களில் கொந்தகையில் நடைபெற்ற அகழாய்வு பணியின் போது மட்டும் சுமார் 161 முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்கொந்தகையில் 9-ம் கட்ட அகழாய்வில் கண்டுடெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழிகளை ஆவணப்படுத்தும் பணிகள் தொடங்கியதுபது குறிப்பிடத்தக்கது.


Next Story