பெண்ணை தாக்கிய வாலிபர் கைது


பெண்ணை தாக்கிய வாலிபர் கைது
x

தஞ்சை அருகே பெண்ணை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டாா்.

தஞ்சாவூர்

வல்லம்;

தஞ்சை அருகே உள்ள காமாட்சிபுரத்தை சேர்ந்தவர் ரெங்கநாயகி (வயது 51). அதே பகுதியை சேர்ந்தவர் பிரவீன் குமார் (30). சம்பவத்தன்று ரெங்கநாயகி அவருடைய மகனுடன் நடந்து சென்ற போது மதுபோதையில் இருந்த பிரவீன்குமார் தகாத வார்த்தைகளால் ரெங்கநாயகியை திட்டி உள்ளார். இதை தட்டிக்ேகட்ட ரெங்கநாயகியை, பிரவீன்குமாா் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த ரங்கநாயகியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இது குறித்த புகாரின் பேரில் செங்கிப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து பிரவீன் குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story