லாரி மோதி பெண் பலி
வில்லுக்குறியில் மகனுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற ேபாது லாரி மோதி பெண் பரிதாபமாக இறந்தார்.
அழகியமண்டபம்,
வில்லுக்குறியில் மகனுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற ேபாது லாரி மோதி பெண் பரிதாபமாக இறந்தார்.
நாகர்கோவிலுக்கு புறப்பட்டனர்
திருவட்டார் அருகே உள்ள வேர்கிளம்பி இடக்காட்டுவிளையை சேர்ந்தவர் இப்ராகின். இவரது மனைவி நசீரா (வயது55). இவர்களுக்கு முகமது இர்பான் (26) என்ற மகனும், 3 மகள்களும் உள்ளனர். நேற்று மாலை 6.30 மணியளவில் நசீராவும், முகமது இர்பானும் மோட்டார் சைக்கிளில் வேர்கிளம்பியில் இருந்து நாகர்கோவில் நோக்கி புறப்பட்டனர். மோட்டார் சைக்கிளை முகமது இர்பான் ஓட்டி சென்றார்.
இவர்கள் வில்லுக்குறி பாலம் அருகே வந்த போது பின்னால் ஒரு லாரி வந்து கொண்டிருந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. அதில் பயணம் செய்த தாய், மகன் இருவரும் கீழே விழுந்தனர்.
பரிதாப பலி
எதிர்பாராத விதமாக நசீரா லாரியின் டயரில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மகன் முகமது இர்பான் சாலையோரம் விழுந்ததால் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.
இதற்கிடையே மோட்டார் சைக்கிள் மீது மோதிய லாரி நிற்காமல் சென்றது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த இரணியல் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற லாரியை அடையாளம் காண்பதற்காக அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்து வருகிறார்கள். தனது கண் முன்பு தாய் இறந்ததை பார்த்து மகன் முகமது இர்பான் கதறி அழுத காட்சி காண்பவர் ெநஞ்சை கரைக்கும் வண்ணம் இருந்தது.