லாரி மோதி பெண் பலி
லாரி மோதி பெண் பலியானார்.
பணகுடி:
வடக்கன்குளத்தை அடுத்த மேல சிவசுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர் அய்யாகுட்டி மனைவி லீலாவதி (வயது 42). மகளிர் சுய உதவிக்குழு தலைவி. அதே ஊரை சேர்ந்த பகவதிராஜ் மனைவி பிரபா (42). நேற்று முன்தினம் இரவு இவர்கள் இருவரும் மொபட்டில் காவல்கிணறு மெயின் ரோட்டில் உள்ள அரசு பள்ளி அருகே சென்று கொண்டிருந்தனர். மொபட்டை பிரபா ஓட்டினார்.
அப்போது அங்குள்ள வேகத்தடையில் ஏறிச்சென்றபோது எதிர்பாராதவிதமாக மொபட்டில் இருந்து கீழே விழுந்தனர். அப்போது எதிரே வந்த லாரி மோதியதில் லீலாவதி பலத்த காயம் அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்தில் பிரபா லேசான காயத்துடன் உயிர் தப்பினார். விபத்து குறித்து பணகுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அஜீகுமார் வழக்குப்பதிவு செய்து குமரி மாவட்டம் அருமனையை சேர்ந்த லாரி டிரைவர் குமார் என்பவரை கைது செய்தார்.