புதுப்பேட்டை அருகேகார் மோதி பெண் படுகாயம்


புதுப்பேட்டை அருகேகார் மோதி பெண் படுகாயம்
x
தினத்தந்தி 11 May 2023 12:15 AM IST (Updated: 11 May 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

புதுப்பேட்டை அருகே கார் மோதி பெண் படுகாயம் அடைந்தார்.

கடலூர்

புதுப்பேட்டை,

புதுப்பேட்டை அருகே உள்ள சேமக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் அரசன் மனைவி வனஜா (வயது 40). இவர் சம்பவத்தன்று பண்ருட்டி - சேலம் மெயின் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வேகமாக வந்த கார் எதிர்பாராத விதமாக வனஜா மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த வனஜா சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக புதுப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story