ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து பெண் பலி
ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து பெண் பலியானார்.
ஜோலார்பேட்டை வக்கணம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி உமா (வயது 35). இவர் ஓடும் ரெயிலில் பயணிகளுக்கு செல்போன் ஹெட்செட் வியாபாரம் செய்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் இருந்து சென்னை நோக்கி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் செல்போன் ஹெட்செட் வியாபாரம் செய்து கொண்டு இருந்தார். கேத்தாண்டப்பட்டி- வாணியம்பாடி ரெயில் நிலையங்களுக்கு இடையே ஓடும் ரெயிலில் இருந்து அவர் தவிறி விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி மற்றும் போலீசார் சென்று உமாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.