வாகனம் மோதி காயமடைந்த பெண் சாவு
வெள்ளமடம் அருகே கல்லூரி வாகனம் மோதி காயமடைந்த பெண் சாவு
ஆரல்வாய்மொழி,
திருப்பதிசாரத்தை சேர்ந்தவர் பிச்சைபால். இவருடைய மனைவி தவமணி (வயது 81). இவருடைய கணவரும், ஒரே மகளும் இறந்து விட்டதால் வெள்ளமடம் கரையான் குழியில் உள்ள தம்பி இஸ்ரவேல் பராமரிப்பில் இருந்து வந்தார்.
இந்தநிலையில் தவமணி தனது தம்பியை கரையான்குழிக்கு சென்று பார்த்து விட்டு மீண்டும் திருப்பதிசாரத்திற்கு புறப்பட்டார். வெள்ளமடத்தை அடுத்த நால்கால்மடம் பகுதியில் நடந்து சென்ற போது பின்னால் வந்த ஒரு தனியார் கல்லூரி வாகனம் எதிர்பாராதவிதமாக மூதாட்டி மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி தவமணி உயிரிழந்தார்.
மேலும் இதுதொடர்பாக ஆரல்வாய்மொழி போலீசார் வாகனத்தை ஓட்டி வந்த அம்பாசமுத்திரம் அருகே ராமலிங்கபுரம் பிள்ளையார்கோவிலை சேந்த கருத்த பாண்டி (28) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.