மோட்டார்சைக்கிள் மோதி பெண் சாவு


மோட்டார்சைக்கிள் மோதி பெண் சாவு
x

மோட்டார்சைக்கிள் மோதி பெண் சாவு

ஈரோடு

கடத்தூர்

கோபி அருகே உள்ள கூகலூரை சேர்ந்தவர் முருகேஷ். அவருடைய மனைவி கண்ணம்மாள் (வயது 56). கூலி வேலை செய்து வந்தார். இந்த நிலையில் கண்ணம்மாள் 2-ந்தேதி முருகேசுடன் மொபட்டில் புதுக்கரை புதூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார்சைக்கிளும், மொபட்டும் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டன.

இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட கண்ணம்மாள் படுகாயம் அடைந்தார். உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் கோபி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே கண்ணம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார்சைக்கிளை ஓட்டி வந்த நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரத்தைச் சேர்ந்த வெங்கடாசலம் (வயது 30) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story