ஜெம்புகாவேரி வாய்க்காலில் மண்டி கிடக்கும் ஆகாயதாமரை செடிகள் அகற்றப்படுமா?
ஜெம்புகாவேரி வாய்க்காலில் மண்டி கிடக்கும் ஆகாயதாமரை செடிகள் அகற்றப்படுமா?
ஜெம்புகாவேரி வாய்க்காலில் மண்டி கிடக்கும் ஆகாயதாமரை செடிகளை அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜெம்புகாவேரி வாய்க்கால்
பாபநாசம் தாலுகா அன்னப்பன்பேட்டை பகுதியில் ஜெம்புகாவேரி வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்காலில் வள்ளி செடிகள் மற்றும் ஆகாய தாமரை செடிகள் மண்டி கிடக்கிறது. இதனால் பாசனத்திற்கு தண்ணீர் செல்ல தடையாக இருந்து வருகிறது. ஜெம்புகாவேரி வாய்க்கால் மூலம் வடிகால் மற்றும் பாசன வசதிபெறக்கூடிய நெய்தலூர், குண்டூர், அன்னப்பன்பேட்டை மற்றும் பொந்தையாகுளம் அதனை சுற்றியுள்ள பல கிராமங்களில் உள்ள ஆயிரத்து 800 ஏக்கர் விவசாய நிலங்கள் மழைகாலங்களில் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு வருகிறது.
அகற்ற வேண்டும்
விவசாய நிலங்களை பாதுகாக்க வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள வசதியாக அன்னப்பன்பேட்டை பகுதியில் ஜெம்புகாவேரி வாய்க்காலில் தண்ணீர் செல்ல தடையாக உள்ள வள்ளிசெடி, ஆகாய தாமரை கொடிகளை உடனடியாக அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடு்த்துள்ளனர்.