பாலம் கட்டும் பணி விரைந்து முடிக்கப்படுமா?


பாலம் கட்டும் பணி விரைந்து முடிக்கப்படுமா?
x

திருப்பயத்தங்குடியில் பாலம் கட்டும் பணி விரைந்து முடிக்கப்படுமா? என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.

நாகப்பட்டினம்

திட்டச்சேரி:

திருப்பயத்தங்குடியில் பாலம் கட்டும் பணி விரைந்து முடிக்கப்படுமா? என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.

பாலம் கட்டும் பணி

திருமருகல் ஒன்றியம் திருப்பயத்தங்குடி வளப்பாற்றின் குறுக்கே நெடுஞ்சாலை துறை மூலம் ரூ.1 கோடியே 55 லட்சம் மதிப்பீட்டில் புதிய பாலம் கட்டும் பணி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பாலம் அமைக்கும் பணி மெதுவாக நடைபெற்று வருவதால் பொதுமக்கள் போக்குவரத்துக்கு மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

ஆற்றில் அடித்து செல்லப்பட்டது

மேலும் காவிரி நீர் கடைமடை பகுதியான திருமருகல் பகுதிகளுக்கு வந்து சேர்ந்தது. இதனால் அப்பகுதி மக்கள் ஆற்றைக் கடக்க தற்காலிக பாலம் அமைக்கப்பட்டது. அதில் அப்பகுதி மக்கள் சென்று வந்தனர். இந்த நிலையில் திடீரென ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தற்காலிக பாலம் ஆற்றில் அடித்து செல்லப்பட்டது. இதனால் ஆற்றை கடக்க முடியாமல் அப்பகுதி மக்கள் சுமார் 5 கிலோமீட்டர் தூரம் சுற்றி வந்து செல்ல வேண்டிய நிலையில் உள்ளனர்.

நடவடிக்கை

இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லை என வருத்தம் தெரிவிக்கின்றனர்.எனவே பாலம் கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story