அகலமான புதிய பாலம் கட்டப்படுமா?


அகலமான புதிய பாலம் கட்டப்படுமா?
x

கூத்தாநல்லூர் அருகே பழுதடைந்த குறுகலான பாலத்தை அகற்றிவிட்டு அகலமான புதிய பாலம் கட்டப்படுமா? என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.

திருவாரூர்

கூத்தாநல்லூர்:

கூத்தாநல்லூர் அருகே பழுதடைந்த குறுகலான பாலத்தை அகற்றிவிட்டு அகலமான புதிய பாலம் கட்டப்படுமா? என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.

கனரக வாகனங்கள்

கூத்தாநல்லூர் அருகே உள்ள வடபாதிமங்கலத்தில் இருந்து புனவாசல் வழியாக திருவாரூர் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை திருவாரூர், மன்னார்குடி, நாகப்பட்டினம், தஞ்சாவூர், கூத்தாநல்லூர் போன்ற நகர பகுதிகளை இணைக்கும் முக்கிய வழித்தடத்தில் அமைந்துள்ளது. இந்த சாலையில் அரசு மற்றும் தனியார் பஸ்கள், பள்ளி கல்லூரி வாகனங்கள், கார், வேன், ஆட்டோ, மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கனரக வாகனங்கள் என தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.

குறுகிய பாலம்

இந்த சாலையில் ஓகைப்பேரையூர் மற்றும் வடபாதி என்ற இடங்களில் ஆற்றின் குறுக்கே மிகவும் அகலமான பாலம் கட்டப்பட்டது. இதனால், எதிர் எதிரே வரும் வாகனங்கள் எளிதில் கடந்து செல்கின்றன. ஆனால், இதே சாலையில் புனவாசல் என்ற இடத்தில் அன்னமரசனார் வடிகால் ஆற்றின் குறுக்கே 100 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மிகவும் குறுகலான பாலம் உள்ளது.

அகற்ற வேண்டும்

இந்த குறுகலான பாலம் பழுதடைந்த நிலையில் உள்ளது. பாலம் குறுகலாக உள்ளதால், எதிர் எதிரே வரும் வாகனங்கள் கடந்து சென்று செல்ல மிகவும் சிரமம் அடைக்கின்றன.

எனவே, பழுதடைந்த குறுகலான பாலத்தை அகற்றி விட்டு, அதே இடத்தில் அகலமான பாலம் கட்டித்தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.


Next Story