மனைவி மாயம்-கணவன் போலீசில் புகார்


மனைவி மாயம்-கணவன் போலீசில் புகார்
x

மனைவி மாயமானது குறித்து அவரது கணவன் போலீசில் புகார் செய்துள்ளார்.

அரியலூர்

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள மருக்காலங்குறிச்சி கிராமம் அரிச்சனத் தெருவை சேர்ந்தவர் வீரமணி. இவரது மனைவி ராணி(வயது 40). இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்த ராணியை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த வீரமணி தனது மனைவியை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தார். ஆனால் அவர் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. பின்னர் இதுகுறித்து வீரமணி ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story