கிளாம்பாக்கம் பஸ் நிலையம் திறப்பில் காலதாமதம் ஏன்?
சென்னை
கிளாம்பாக்கம் பஸ் நிலையம் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து அமைச்சர் சேகர்பாபுவிடம் நிருபர்கள் கேட்டனர். அதற்கு பதில் அளித்து அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:-
கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தை பொறுத்தவரையில் கடந்த காலங்களில் திட்டமிடல் இல்லாமல் செய்து விட்டார்கள். நாங்கள் வந்த பிறகு தான் அதனை திட்டமிட்டு பணிகளை மேற்கொண்டு வருகிறோம். சின்ன மழைக்கே வெள்ளம் தேங்கி விடுகிறது. எனவே அதனை சரிபடுத்தும் வகையில் பணிகளை மேற்கொண்டுள்ளோம்.
ஆஸ்பத்திரி, போலீஸ் நிலையம் அமைக்கும் பணி நடக்கிறது. கடந்த ஆட்சியில் இதையெல்லாம் திட்டமிடாததால் இந்த காலதாமதம் ஏற்படுகிறது.
பஸ் நிலைய பணிகள் தற்போது முடிந்து விட்டது. ஆனால் அடிப்படை பணிகளை முழுமையாக நிறைவு செய்ய வேண்டும். அதற்கான பணிகளை தான் செய்து கொண்டிருக்கிறோம். விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவோம். தனியார் பஸ்களை நிறுத்துவதற்காக அவர்களை அழைத்து பேசி இருக்கிறோம். முடிச்சூரில் தனியார் பஸ் நிலையம் அமைக்கும் பணிக்காக ஒப்பந்தம் கோரப்பட்டு, பணிகள் தொடங்கி வைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.