ஓட்டப்பிடாரம் அருகே 155 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்
ஓட்டப்பிடாரம் அருகே 155 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்
ஓட்டப்பிடாரம்:
ஓட்டப்பிடாரம் அருகே 155 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.
நலத்திட்ட உதவிகள்
ஓட்டப்பிடாரம் அருகே கருணாநிதி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு வேடநத்தம் கிராமத்தில் பள்ளி மாணவ-மாணவிகள் இலவச நோட்டு புத்தகம் மற்றும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடந்தது. விழாவுக்கு மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். ஓட்டப்பிடாரம் தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் காசிவிஸ்வநாதன் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியின் போது 5 ஏழை பெண்களுக்கு தையல் எந்திரம், 5 நபருக்கு இஸ்திரி பெட்டி, 5 முடி திருத்தும் கருவிகள் மற்றும் 140 மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டு, புத்தகங்களை
அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.
நிகழ்ச்சியில் எப்போதும்வென்றான் பஞ்சாய்த்து தலைவர் முத்துக்குமார் உட்ப பலர் கலந்து கொண்டனர். முன்னதாக வேடநத்தம் பஸ்நிறுத்தத்தில் தி.மு.க கட்சி கொடியை அமைச்சர் ஏற்றினார்.
தூண்டில் வளைவு
விளாத்திகுளம் அருகே உள்ள கீழவைப்பார் கிராமத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பாக ரூ.10 கோடி மதிப்பீட்டில் தூண்டில் வளைவு, மீன் ஏலக்கூடம், கான்கிரீட் சாலை திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டுவிழா நடந்தது. விழாவுக்கு மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். விழாவில் அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு, அந்த திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.விளாத்திகுளம் தி.மு.க கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, ஓட்டப்பிடாரம் தி.மு.க கிழக்கு ஒன்றிய செயலாளர் காசி விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் விளாத்திகுளம் பேரூராட்சி மன்றத் தலைவர் அய்யன்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்
முன்னதாக உலக சுற்றுச்சூழல் தினமான நேற்று விளாத்திகுளம் அருகே உள்ள புளியங்குளம் கிராமத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட எம்.எல்.ஏ. ஆயிரம் மரக்கன்றுகளை நடும்பணியை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் மற்றும் தி.மு.க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.