ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 1.45 லட்சம் கனஅடியாக குறைந்தது


ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 1.45 லட்சம் கனஅடியாக குறைந்தது
x

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 1.45 லட்சம் கனஅடியாக குறைந்துள்ளது.

தர்மபுரி

பென்னாகரம்:

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 1.45 லட்சம் கனஅடியாக குறைந்துள்ளது.

வெள்ளப்பெருக்கு

கர்நாடக மற்றும் கேரளா மாநிலம் வயநாடு, தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்தது. இதன் காரணமாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளை வெள்ளம் மூழ்கடித்து பெருக்கெடுத்து ஓடுகிறது.

இதனிடையே காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையின் அளவு குறைந்ததால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிப்படியாக குறைய தொடங்கியது. நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இந்த நீர்வரத்தை பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் அளவீடு செய்து கண்காணித்து வருகின்றனர்.

நீர்வரத்து குறைந்தது

இந்த நிலையில் நேற்று மாலை 4 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 1 லட்சத்து 45 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்த போதும் ஒகேனக்கல்லில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு நீடிக்கிறது. இதனால் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் ஆற்றில் குளிக்கவோ, துணி துவைக்கவோ செல்ல வேண்டாம் என போலீசார் ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தி வருகின்றனர்.

தொடர்ந்து போலீசார், தீயணைப்பு படையினர் மற்றும் வருவாய்த்துறையினர் ஒகேனக்கல்லில் காவிரி கரையோர பகுதிகளில் தீவிர ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர். மேலும் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் விதித்த தடை நீடிப்பதால் சுற்றுலா பயணிகளை மடம் சோதனைச்சாவடியிலேயே தடுத்து நிறுத்தி போலீசார் திருப்பி அனுப்பி வருகின்றனர்.


Next Story