துலுக்கான் ஏரியை தூர்வார தண்ணீரை வெளியேற்றியதால் பரபரப்பு


துலுக்கான் ஏரியை தூர்வார தண்ணீரை வெளியேற்றியதால் பரபரப்பு
x
தினத்தந்தி 1 March 2023 12:15 AM IST (Updated: 1 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தேன்கனிக்கோட்டையில் துலுக்கான் ஏரியை தூர்வார தண்ணீரை வெளியேற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டை

தேன்கனிக்கோட்டை பேரூராட்சி லக்கசந்திரம் கிராமத்தில் துலுக்கான் ஏரி உள்ளது. இந்த ஏரி மூலம் சுற்று வட்டார பகுதிகளில் 1000 ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வந்தது. இந்த ஏரியை தூர்வாரி கரையை பலப்படுத்தும் பணிக்காக தண்ணீரை வெளியேற்ற பேரூராட்சி நிர்வாகம் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்பேரில் ஏரிக்கரையின் ஒரு பகுதியில் 10 அடி ஆழம் பொக்லைன் எந்திரம் மூலம் குழி தோண்டி தண்ணீரை வெளியேற்றினர். இதனால் கவலை அடைந்த விவசாயிகள் இதுகுறித்த தாசில்தாா் சரவணமூர்த்திக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டார். அவர் பேரூராட்சி செயல் அலுவலர் மனோகரனிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். ஏரியை தூர்வார தண்ணீரை வெளியேற்றியதால் விவசாயிகளிடையே பரபரப்பு ஏற்பட்டது.


Next Story