2 ஆயிரம் பேர் பங்கேற்ற ஒயிலாட்டம்


2 ஆயிரம் பேர் பங்கேற்ற ஒயிலாட்டம்
x

திருச்செங்கோட்டில் உலக சாதனை முயற்சியாக 2 ஆயிரம் பேர் பங்கேற்ற ஒயிலாட்டம் நிகழ்ச்சி நடந்தது.

நாமக்கல்

திருச்செங்கோடு

திருச்செங்கோட்டில் கொங்கு பாரம்பரிய ஒயிலாட்டம் 37-வது அரங்கேற்ற விழா மற்றும் நோபல் ரெக்கார்ட்ஸ் உலக சாதனை முயற்சியாக 4 மணி நேரம் தொடர்ந்து சிறுவர், சிறுமிகள், ஆண்கள், பெண்கள் என 2000 பேர் கலந்துகொண்ட கொங்கு ஒயிலாட்ட நிகழ்ச்சி வேலூர் ரோட்டில் அமைக்கப்பட்டிருந்த கலையரங்கத்தில் நடந்தது. திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈ.ஆர்.ஈஸ்வரன், நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு, தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் நடேசன், திரைப்பட நடிகர் விஜய் கிருஷ்ணராஜ் ஆகியோர் தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் ஒரே வண்ணத்திலான பாரம்பரிய உடையணிந்து பெண்கள் ஒயிலாட்டம் ஆடினர். மேலும் சிறுவர்கள் வேட்டி சட்டை அணிந்து ஒயிலாட்டம் ஆடினர். இதில் நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. வக்கீல் அணி தலைவர் சுரேஷ்பாபு, மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் செல்வராஜ், தென் மண்டல லாரி உரிமையாளர் சங்க தலைவர் அனிதா, ரிக் உரிமையாளர்கள் சங்க தலைவர் லட்சுமணன், திருச்செங்கோடு வட்டார கொங்கு வேளாளர் சங்க தலைவர் அப்பாவு, செயலாளர் தனேஷ்குமார், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் அறங்காவலர் குழு தலைவர் தங்கமுத்து, ஒயிலாட்ட ஆசான் கனகராஜ், நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட் முதன்மை அலுவலர் அரவிந்த் உள்ளிட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story