வ.உ.சி.பிறந்தநாள் விழா


வ.உ.சி.பிறந்தநாள் விழா
x

ஏரல், அறுமுகநேரியில் வ.உ.சி.பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

தூத்துக்குடி

ஏரல்:

ஏரல் சைவ வேளாளர் சங்கம் சார்பில் ஏரல் காந்தி சிலை அருகே வ.உ.சி.யின் 151-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில் ஏரல் சைவ வேளாளர் சங்க தலைவர் நங்கமுத்து, பொருளாளர் வீரபாகுபிள்ளை, செயலாளர் கண்ணன், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதேபோன்று ஏரல் பா.ஜனதா சார்பில் வ.உ.சி. உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. ஒன்றிய தலைவர் ராஜகோபால், அரசு தொடர்பு பிரிவின் மாவட்ட செயலாளர் வெங்கடேஷ், ஒன்றிய செயலாளர் சிவபாலன், ஒன்றிய வணிகர் பிரிவின் தலைவர் விஜயராகவன், ஒன்றிய செயற்குழு உறுப்பினர் மந்திர பிரகாஷ், வழக்கறிஞர் பிரிவு செல்வகுமார், சிறுத்தொண்டநல்லூர் ஊராட்சி பா.ஜ.க. தலைவர் பால்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாட்டினை ஏரல் நகரத் தலைவர் பரமசிவன் செய்திருந்தார்.

இதேபோன்று ஆறுமுகநேரி விநாயகர் கோவில் தெருவில் உள்ள சைவ வேளாளர் அபிவிருத்தி சங்கத்தின் சார்பில் வ.உ.சி.யின் 151-வது பிறந்த தின விழா கொண்டாடப்பட்டது. அனைவரும் அவரது உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் சைவ வேளாளர் சங்க தலைவர் சங்கரலிங்கம், செயலாளர் முருகன், பொருளாளர் கற்பக விநாயகம் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story