உடன்குடியில்விநாயகர் சிலைகள் ஊர்வலம்


உடன்குடியில்விநாயகர் சிலைகள் ஊர்வலம்
x
தினத்தந்தி 22 Sept 2023 12:15 AM IST (Updated: 22 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

உடன்குடியில்விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடந்தது.

தூத்துக்குடி

உடன்குடி:

உடன்குடி ஒன்றிய இந்து முன்னணி சார்பில் உடன்குடி மெயின்பஜார் பெருமாள்புரம், வைத்திலிங்கபுரம், சந்தையடியூர், கொட்டங்காடு, சோமநாதபுரம், சிவலூர், காலன்குடியிருப்பு, பரமன்குறிச்சி, தைக்காவூர் உட்பட 30 இடங்களில் கடந்த 18-ந் தேதி விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு தினமும் சிறப்பு பூஜைகளும். பல்வேறு நிகழ்சிகளும் நடந்து வந்தன. நேற்று முன்தினம் அனைத்து விநாயகர் சிலைகளும் வாகனங்களில் உடன்குடி தேரியூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா சிதம்பரேஸ்வரர் மேல்நிலைப்பள்ளி அருகே கொண்டு வரப்பட்டன. பின்னர் மாலை 5 மணிக்கு உடன்குடி மெயின் பஜாரில் இருந்து விநாயர் சிலை ஊர்வலம் புறப்பட்டது. ஊர்வலம் கொட்டங்காடு கிறிஸ்டியா நகரம். சத்தியமூர்த்தி பஜார், சந்தையடிதெரு காலங்குடியிருப்பு, பஸ் நிலையம், கீழபஜார் வடக்கு பஜார், தைக்காவூர் வழியாக திருச்செந்தூர் சென்றடைந்தது. இதில் இந்து முன்னணி, பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ், சேவா பாரதி மற்றும் பல்வேறு இந்து அமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இரவில் திருச்செந்தூர் கடலில் அனைத்து விநாயகர் சிலைகளும் கரைக்கப்பட்டன.


Next Story