விநாயகர் சதுர்த்தி : செப்டம்பர் 18 ஆம் தேதி நியாய விலைக்கடைகளுக்கு விடுமுறை
செப்டம்பர் 18 ஆம் தேதி நியாய விலைக்கடைகள் செயல்படாது என்று உணவுப்பொருள் வழங்கல் துறை அறிவித்துள்ளது.
சென்னை,
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 18-ந்தேதி நியாய விலைக்கடைகள் இயங்காது என நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை
விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 18-ந்தேதி கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கான பொது விடுமுறையை இதற்கு முன்னதாக செப்டம்பர் 17-ந்தேதி என்று தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில் , விநாயகர் சதுர்த்தி செப்டம்பர் 18-ந்தேதி கொண்டாடப்படும் என இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு, பல்வேறு கோயில்களின் தலைமை தெரிவித்திருப்பதால் அன்றைய தினம் பொது விடுமுறை என தமிழக அரசு அறிவித்தது.
அதனைத் தொடர்ந்து தற்போது செப்டம்பர் 18-ந்தேதி (திங்கள்கிழமை) விநாயகர் சதுர்த்தி விடுமுறையையொட்டி தமிழ்நாட்டில் நியாய விலைக்கடைகள் செயல்படாது என்று நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அறிவித்துள்ளது.
Related Tags :
Next Story