தாலுகா அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை


தாலுகா அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை
x

சுடுகாட்டை ஆக்கிரமிக்க முயற்சி நடப்பதாக கூறி, வேடசந்தூர் தாலுகா அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.

திண்டுக்கல்

வேடசந்தூர் அருகே கல்வார்பட்டியில் 20 சென்ட் பரப்பளவில் சுடுகாடு உள்ளது. இதனை தனிநபர் ஒருவர் ஆக்கிரமிக்க முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் அந்த நிலத்துக்கு வேடசந்தூர் தாலுகா அலுவலகத்தில் அவர் மனு கொடுத்துள்ளார். இதனை அறிந்த கல்வார்பட்டி கிராம மக்கள் வேடசந்தூர் தாலுகா அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள், தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம், தாசில்தார் சக்திவேலன் மற்றும் வருவாய்த்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர். மேலும் கிராம மக்களுடன் சேர்ந்து வருவாய்த்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். தாலுகா அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்ட சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story