15 ஆண்டுகளாக வாடகை கட்டிடத்தில் இயங்கும் கிராம நிர்வாக அலுவலகம்
வாய்மேடு அருகே 15 ஆண்டுகளாக வாடகை கட்டிடத்தில் இயங்கும் கிராம நிர்வாக அலுவலகத்துக்கு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாய்மேடு:
வாய்மேடு அருகே 15 ஆண்டுகளாக வாடகை கட்டிடத்தில் இயங்கும் கிராம நிர்வாக அலுவலகத்துக்கு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாடகை கட்டிடம்
நாகை மாவட்டம் வாய்மேடு அருகே தகட்டூர் பெத்தாச்சிகாடு கிராம நிர்வாக அலுவலகம் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு சேதமடைந்தது. அதை தொடர்ந்து அங்கிருந்து தகட்டூர் ஆதியங்காடு பகுதியில் உள்ள வாடகை கட்டிடத்திற்கு கிராம நிர்வாக அலுவலகம் மாற்றப்பட்டது. இது குறித்து பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனுக்கள் அளித்தும், புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அனுமதி அளிக்க வேண்டும்
இந்த நிலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஒரு அறை பூட்டிவைக்கப்பட்ட நிலையில் உள்ளது.
எனவே சம்பந்தப்பட்ட துறையினர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், 15 ஆண்டுகளாக வாடகை கட்டிடத்தில் இயங்கும் கிராம நிர்வாக அலுவலகத்தை, ஊராட்சி மன்ற அலுவலகத்தில் உள்ள பூட்டிய அறையில் இயங்குவதற்கு அனுமதி அளிக்க வேண்டும். அல்லது கிராம நிர்வாக அலுவலகத்துக்கு புதிதாக கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.