அரசு நலத்திட்ட உதவி வழங்கும் விழா
பசும்பொன் தேவர் குருபூஜை விழாவையொட்டி அரசு நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடந்தது.
கமுதி,
பசும்பொன் தேவர் குருபூஜை விழாவையொட்டி அரசு நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடந்தது.
நலத்திட்ட உதவி
கமுதி பசும்பொன் தேவர் குருபூஜையை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். த.மா.கா. சார்பில் தலைவர் ஜி.கே. வாசன் உத்தரவின்பேரில் ராமநாத மாவட்ட தலைவர் பி.கே. கே. ராமமூர்த்தி தலைமையில் முன்னாள் எம்.பி. ராம்பிரபு, முன்னாள் எம்.எல்.ஏ. ராஜேந்திரன் ஆகியோர் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். தென்னாட்டு மக்கள் கட்சி சார்பில் நிறுவனத் தலைவர் கணேஷ் தேவர் தலைமையில் பொருளாளர் பாலசந்தானம், பொதுச் செயலாளர் செந்தில் வாண்டையார் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து தேவர் மன்ற கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் அரசு நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடந்தது. காதர் பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ., கமுதி யூனியன் தலைவர் தமிழ்செல்வி போஸ், துணைத் தலைவர் சித்ராதேவி அய்யனார், மாவட்ட கவுன்சிலர்கள் வாசுதேவன், போஸ், சசிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அனைவரையும் மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன் வரவேற்றார். விழாவில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் உருவப்படத்தை அமைச்சர் பெரியசாமி திறந்து வைத்தார். பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் பெரியகருப்பன், ராஜ கண்ணப்பன், நவாஸ் கனி எம்.பி. ஆகியோர் வழங்கினர்.
மரியாதை
விழாவில் முதுகுளத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ. முருகவேல், தி.மு.க. மாநில இலக்கிய அணி செயலாளர் பெருநாழி போஸ், மாவட்ட ஊரக வளர்ச்சி துறை கூடுதல் கலெக்டர் பிரவீன்குமார், ஊராட்சிகளின் உதவி இயக்குனர் பரமசிவம், மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் மாவீரன் வேலுச்சாமி, பசும்பொன் ஊராட்சி தலைவர் ராமகிருஷ்ணன் திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கை மாறன், கமுதி யூனியன் ஆணையாளர்கள் மணிமேகலை, ராஜகோபால் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பாண்டி நன்றி கூறினார்.