கால்நடை மருத்துவ சிகிச்சை விழிப்புணர்வு முகாம்
கால்நடை மருத்துவ சிகிச்சை விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
திருச்சி
மணிகண்டம் ஒன்றியம், மேக்குடி ஊராட்சிக்குட்பட்ட ஆலம்பட்டியில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் சிறப்பு கால்நடை சிகிச்சை சுகாதார விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு திருச்சி மண்டல கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குனர் டாக்டர் எஸ்தர் ஷீலா தலைமை தாங்கினர். முகாமை மேக்குடி ஊராட்சி மன்ற தலைவர் லாரன்ஸ் தொடங்கி வைத்தார்.இதில் கால்நடை உதவி மருத்துவர் இன்பசெல்வி தலைமையிலான மருத்துவக் குழுவினர் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர். மேலும் கால்நடை வளர்ப்போர்களுக்கு தீவனப்புல் வளர்ப்பு, கிசான் கடன் அட்டை குறித்த ஆலோசனை மற்றும் சினை பிடிக்காத மாடுகளுக்கான தாது உப்பு கலவை வழங்கப்பட்டது. முகாமில் சிறந்த 3 கிடேரி கன்றுகளுக்கு சிறந்த கால்நடை பராமரிப்பு மேலாண்மைக்காக பரிசுகள் வழங்கப்பட்டன.
Related Tags :
Next Story