கால்நடை மருத்துவ முகாம்


கால்நடை மருத்துவ முகாம்
x
தினத்தந்தி 15 Sept 2023 4:00 AM IST (Updated: 15 Sept 2023 4:00 AM IST)
t-max-icont-min-icon

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி வேடசந்தூர் தாலுகா நத்தப்பட்டியில் கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம், கால்நடை பராமரிப்புத்துறை, பால்வளத்துறை, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி வேடசந்தூர் தாலுகா நத்தப்பட்டியில் கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது.

இதற்கு கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குனர் ராம்நாத், வேடசந்தூர் ஒன்றியக்குழு தலைவர் சவுடீஸ்வரி கோவிந்தன், ஊராட்சி தலைவர் சந்தியாபிரபு காந்தி, வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் கவிதா பார்த்திபன், பேரூராட்சி தலைவர் மேகலா கார்த்திகேயன், மாவட்ட கவுன்சிலர் தமிழ்செல்வி ராமச்சந்திரன், ஒன்றிய கவுன்சிலர் ஜானகி அசோக்குமார், ஸ்ரீராமபுரம் ஊராட்சி தலைவர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முகாமில் காந்திராஜன் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ரூ.5 லட்சம் மதிப்பில் ஊக்கத்தொகை, சிறந்த பால் உற்பத்தியாளர்களுக்கு பரிசு வழங்கினார். முகாமில் ஆவின் பொதுமேலாளர் இளங்கோவன், கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள், மருத்துவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் 300-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்துதல், குடற்புழு நீக்குதல், சினை பரிசோதனை, செயற்கை முறை கருவூட்டல் உள்ளிட்ட சிகிச்சைகள் இலவசமாக அளிக்கப்பட்டன.


Next Story