பிரத்தியங்கிரா தேவி கோவில் வருசாபிஷேக விழா


பிரத்தியங்கிரா தேவி கோவில் வருசாபிஷேக விழா
x
தினத்தந்தி 19 Jun 2023 12:15 AM IST (Updated: 19 Jun 2023 2:44 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி பிரத்தியங்கிரா தேவி கோவில் வருசாபிஷேக விழா நடந்தது.

தூத்துக்குடி

தூத்துக்குடி அருகே உள்ள அய்யனடைப்பு மகா பிரத்தியங்கிராதேவி-காலபைரவர், குருமகாலிங்கேஸ்வரர், சனீஸ்வரர், வாராஹி அம்மன், சரசுவதி, லட்சுமி, வீரணார், முனீசுவரர் உள்ளிட்ட சுவாமிகள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். இந்த கோவிலில் நேற்று முன்தினம் வருசாபிஷேக விழா மற்றும் மகா அமாவாசை வழிபாடுகள் நடந்தன. விழாவை முன்னிட்டு காலை 9.10 மணிக்கு விக்னேசுவர பூஜை, கணபதி ஹோமத்துடன் வருசாபிஷேக விழா மற்றும் அமாவாசை யாக வழிபாடுகள் தொடங்கியது.

தொடர்ந்து காலை 9.50 மணிக்கு, நவக்கிரக ஹோமம், சுதர்சன ஹோமம், மஹா பூர்ணாகுதியும், காலை 10.45 மணிக்கு லட்சுமிபூஜை, கோ பூஜை, கன்னிகா பூஜையும், மதியம் 12.05 மணிக்கு மகாபிரத்தியங்கிராதேவி-காலபைரவர், மகாசரசுவதி-மகாலட்சுமிதேவி, குருமகாலிங்கேசுவரர், வாராஹி அம்மனுக்கு வருசாபிஷேகம் நடந்தது. நிகழ்ச்சிக்கு சற்குரு சீனிவாச சித்தர் தலைமை தாங்கி வருசாபிஷேகத்தை நடத்தினார். தொடர்ந்து பால், தயிர், பன்னீர், மஞ்சள் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகம், மகா யாகம், அலங்காரத்துடன் தீபாரதனை நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து மதியம் பக்தர்களுக்கு மஹா அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் மலேசிய தொழில் அதிபர்கள் சேகர், ராமகிருஷ்ணன் மற்றும் முக்கிய பிரமுகர்கள், பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.


Next Story