அறிவியல் முன்னேற்றங்களை மக்களுக்கு விளக்க 'வாரம் ஓர் ஆய்வகம்' நிகழ்ச்சி-காரைக்குடி சிக்ரியில் 24-ந்தேதி தொடக்கம்


அறிவியல் முன்னேற்றங்களை மக்களுக்கு விளக்க வாரம் ஓர் ஆய்வகம் நிகழ்ச்சி-காரைக்குடி சிக்ரியில் 24-ந்தேதி தொடக்கம்
x

அறிவியல் முன்னேற்றங்களை மக்களுக்கு விளக்க வாரம் ஓர் ஆய்வகம் நிகழ்ச்சி காரைக்குடி சிக்ரியில் 24-ந்தேதி தொடங்குகிறது.

சிவகங்கை

காரைக்குடி

அறிவியல் முன்னேற்றங்களை மக்களுக்கு விளக்க வாரம் ஓர் ஆய்வகம் நிகழ்ச்சி காரைக்குடி சிக்ரியில் 24-ந்தேதி தொடங்குகிறது.

பேட்டி

காரைக்குடியில் உள்ள மத்திய மின் வேதியியல் ஆய்வகத்தின் (சிக்ரி) டைரக்டர் டாக்டர் ரமேஷா நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை மந்திரி ஜிதேத்திர சிங், அறிவியல் மற்றும் தொழில் ஆய்வு மன்றத்தில் உள்ள 37 முதன்மையான ஆய்வகங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வாரமும் ஒன்றன்பின் ஒன்றாக தங்களின் பிரத்யேக கண்டுபிடிப்புக்கள் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களை இந்திய மக்களுக்கு வெளிப்படுத்தும்படி அறிவுறுத்தியுள்ளார்.

அதன்படி வருகிற 24-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை ஒரு வாரம் ஒரு ஆய்வகம் என்ற பிரசாரத்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் சிக்ரியின் வரலாறு, மரபு, சாதனைகள், மற்றும் அனைத்து ஆராய்ச்சி துறைகளாகிய அரிமான தடுப்பு, புராண மற்றும் கற்கால மின்கலம் தொழிற்சாலைக்கு உபயோகமான ரசாயனங்கள், மின்முலாம், மின் வேதியியல், உணரிகள் மற்றும் தூய நிலையான ஆற்றல் ஆகியவற்றில் நடைபெறும் ஆராய்ச்சி தொழில்நுட்பம் மற்றும் மேம்பாட்டு நிகழ்ச்சிகள் பற்றி எடுத்துரைக்கப்பட உள்ளது.

விழிப்புணர்வு பேரணி

வருகிற 24-ந் தேதி முதல் 5 நாட்கள் நடைபெற உள்ள ஒரு வாரம் ஒரு ஆய்வகம் பிரசாரத்திற்கு சுமார் 5 ஆயிரத்திற்கும் அதிகமான பார்வையாளர்கள் கலந்து கொள்வார்கள், இதில் குறிப்பாக மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள், முதலீட்டாளர்கள். சிறு, குறு தொழில் முனைவோர், அரசு ஊழியர்கள், பொதுமக்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் ஆகியோர் பங்கு பெறுவார்கள்.

24-ந்தேதி ஒரு வாரம் ஒரு ஆய்வகம் நிகழ்ச்சி மலர் வெளியீடு மற்றும் தொழில் வர்த்தக சந்திப்பும், 25-ந் தேதி சிக்ரியில் 76-வது நிறுவன நாள் கொண்டாட்டம் மற்றும் அரிமான தடுப்பு கருத்தரங்கமும், 26-ந் தேதி அறிவுசார் காப்புரிமை விழிப்புணர்வு பேரணி மற்றும் மாணவர்கள் இணைப்பு நிகழ்வும், 27-ந்தேதி அறிவுசார் காப்புரிமை கருத்தரங்கமும், 28-ந்தேதி நிறைவு நாள் நிகழ்ச்சியும் சிக்ரியில் நடைபெற உள்ளது.

தமிழகத்தை சேர்ந்த கலைச்செல்வி பங்கேற்பு

இந்த நிகழ்ச்சிகளில் நெல்லை மாவட்டம், வி.கே.புரத்தை சேர்ந்தவரும், மத்திய அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றத்தின் (சி.எஸ்.ஐ.ஆர்) டைரக்டர் ஜெனரல் டாக்டர் கலைச்செல்வி, புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆராய்ச்சி அமைச்சகத்தின் செயலர் பூபேந்திர சிங் பாலா, அறிவியல் மற்றும் தொழில் ஆய்வு மன்றத்தின் பொறியியல் கட்டமைப்பு ஆராய்ச்சி மையத்தின் டைரக்டர் டாக்டர் ஆனந்தபல்லி, மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவன டைரக்டர் ஸ்ரீராம், சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் மற்றும் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வகத்தின் மூத்த விஞ்ஞானிகள் கலந்து கொள்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story