வரலட்சுமி விரதம்:அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு -திரளான பெண்கள் சாமி தரிசனம்


தினத்தந்தி 26 Aug 2023 6:00 AM IST (Updated: 26 Aug 2023 6:01 AM IST)
t-max-icont-min-icon

வரலட்சுமி விரதத்தையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் விரதம் இருந்து வழிபட்டனர்.

நீலகிரி


கூடலூர்


வரலட்சுமி விரதத்தையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் விரதம் இருந்து வழிபட்டனர்.


வரலட்சுமி விரதம்


ஆவணி மாதம் வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரதத்தை பெண்கள் கடைபிடித்து வருகின்றனர். இதன் மூலம் குடும்ப நலன், செல்வ வளம் உள்ளிட்ட பலன்கள் கிடைப்பதாக ஐதீகம். நேற்று வரலட்சுமி விரதத்தையொட்டி பெண்கள் விரதம் மேற்கொண்டனர். இதைத்தொடர்ந்து அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது.


கூடலூர் பட்டத்துளசியம்மன் கோவிலில் லட்சுமி தேவி சன்னிதானத்தில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து கூடலூர் குசுமகிரி குமர முருகன் கோவில் சன்னிதானத்தில் உள்ள லட்சுமி- சரஸ்வதி தேவிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து துர்க்கை அம்மனுக்கு ஏராளமான பெண்கள் வளையல்கள் அலங்காரம் செய்து வழிபட்டனர்.


பொக்காபுரம் மாரியம்மன் கோவில்


முன்னதாக முருகப் பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது.


இதேபோல் பொக்காபுரம் மாரியம்மன் கோவில், மேல் கூடலூர் சந்தை கடை மாரியம்மன், 2-ம் மைல் முத்துமாரியம்மன் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். ஊட்டி மாரியம்மன் கோவிலில் நேற்று சிறப்பு வழிபாடுகள் நடந்தது. இதில் திரளான பெண்கள் உள்பட பலர் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டு சென்றனர். இதேபோல் ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கோவில்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனையோடு பூஜைகள் நடந்தது. மேலும் வீடுகளில் பெண்கள் வரலட்சுமி விரதத்தை கடைபிடித்தனர்.



Next Story