தேசிய நீச்சல் போட்டிக்கு வள்ளியூர் பள்ளி மாணவர் தேர்வு


தேசிய நீச்சல் போட்டிக்கு வள்ளியூர் பள்ளி மாணவர் தேர்வு
x

தேசிய நீச்சல் போட்டிக்கு வள்ளியூர் பள்ளி மாணவர் தேர்வு செய்யப்பட்டார்.

திருநெல்வேலி

வள்ளியூர் (தெற்கு):

தமிழ்நாடு நீச்சல் கழகம் ஆகஸ்ட் 15-ந் தேதி ஒடிசா, புவனேஸ்வரில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான நீச்சல் போட்டிக்கு தமிழ்நாட்டின் சார்பாக கலந்துகொள்ள நீச்சல்வீரர்களை தேர்வு செய்யும் விதமாக மாவட்ட அளவிலான ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டிகளை நடத்தியது. புதூர் கிங்ஸ் பள்ளி மாணவர் ஜேம்ஸ் பெவன் தமிழ்நாடு சார்பாக விளையாட தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டியில் ப்ரெஸ்ட் ஸ்டோக் பிரிவில் 50மீ தொலைவை 32.76 வினாடிகளில் கடந்து வெள்ளி பதக்கத்தைப் பெற்றதோடு தேசிய அளவிலான போட்டியில் தமிழ்நாடு சார்பாக கலந்து கொள்ளும் தகுதி பெற்றார். இவரையும் பயிற்சியாளர் அந்தோணியையும் பள்ளியின் தாளாளர் நவமணி பள்ளியின் முதல்வர் சகாயமேரி மற்றும் உடற்பயிற்சித்துறை தலைவர் ஜோஷ்வா ஆகியோர் பாராட்டினர்.


Next Story