முத்துமாரியம்மன் கோவிலில் வைகாசி திருவிழா


முத்துமாரியம்மன் கோவிலில் வைகாசி திருவிழா
x

சயனபுரம் முத்துமாரியம்மன் கோவிலில் வைகாசி திருவிழா நடைபெற்றது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலியை அடுத்த சயனபுரம் கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன், கொளக்கியம்மன் கோவிலில் வைகாசி மாத திருவிழா நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது. மதியம் ஊரணி பொங்கல் வைக்கப்பட்டது. தொடர்ந்து மாலையில் பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். இதை தொடர்ந்து அம்மன் மலர்களால் அலங்காரம் செய்து அனைத்து வீதிகளிலும் வீதி உலா நடந்தது. பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு சாமிதரிசனம் செய்தனர்.


Next Story