நீச்சல் போட்டியில் வடக்கன்குளம் பள்ளி மாணவிகள் சாதனை


நீச்சல் போட்டியில் வடக்கன்குளம் பள்ளி மாணவிகள் சாதனை
x

தேசிய நீச்சல் போட்டியில் வடக்கன்குளம் பள்ளி மாணவிகள் சாதனை படைத்தனர்.

திருநெல்வேலி

வடக்கன்குளம்:

தேசிய அளவில் பள்ளி மாணவர்களுக்கான நீச்சல் போட்டிகள் ஒடிசா மாநிலத்தில் நடைபெற்றது. இதில் வடக்கன்குளம் எஸ்.ஏ.வி.பாலகிருஷ்ணா பள்ளி மாணவர்கள் 6 பேர் கலந்து கொண்டனர். இதில் மாணவி சாசினி 4 வெண்கல பதக்கமும், மாணவி மரிய வின்சியா ஒரு வெண்கலப்பதக்கமும் வென்றனர்.

சாதனை படைத்த மாணவிகளையும் பயிற்சி அளித்த ஆசிரியர்கள் சிக்கந்தர் சார்ஜன், அஜித்குமார், சுல்தான் சிக்கந்தர் பாஷா ஆகியோரையும் பள்ளி தலைவர் கிரகாம்பெல், தாளாளர் திவாகரன், முதல்வர் சுடலையாண்டி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.


Next Story