அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் சமயத்தில் பதவி உயர்வு கிடைக்கும் வகையில் செயற்கையாக காலியிடம் உருவாக்கக்கூடாது


அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் சமயத்தில் பதவி உயர்வு கிடைக்கும் வகையில் செயற்கையாக காலியிடம் உருவாக்கக்கூடாது
x

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் சமயத்தில் பதவி உயர்வு கிடைக்கும் வகையில் செயற்கையாக காலியிடம் உருவாக்கக்கூடாது தலைமைச் செயலாளர் உத்தரவு.

சென்னை,

தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு, அனைத்து துறை செயலாளர்களுக்கும், மாவட்ட கலெக்டர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் தினத்தன்று அல்லது சில நாட்களுக்கு முன்பாக பதவி உயர்வு கிடைப்பதற்காக செயற்கையாக காலிப்பணியிடம் உருவாக்கப்படுவதாக தகவல்கள் வருகின்றன. இதன்மூலம் அந்த ஊழியருக்கு பதவி உயர்வுக்கான காலம் வருவதற்கு முன்பே பதவி உயர்வு கிடைத்து விடுகிறது.

இவ்வாறு ஓய்வு பெறும் சமயத்தில் அவர் பதவி உயர்வு பெற்றால் முழு சேவை செய்யாமலேயே அதற்கான முழு சம்பளம் உள்ளிட்ட பணப்பலனை பெற்று விடுகிறார்.

இவ்வாறு பலருக்கு பதவி உயர்வு வழங்க கோப்புகள் தயாரிக்கப்படுவதாக அரசின் கவனத்துக்கு தகவல் வந்துள்ளது. இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.

ஒவ்வொரு ஆண்டும் காலதாமதமின்றி உரிய காலத்தில் தேர்வானோர் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டு முறையாக பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும். தகுதி உள்ள அலுவலர்கள் பதவி உயர்வு பெறாமல் ஓய்வு பெறுவது தவிர்க்கப்பட வேண்டும்.

சில அரசு அலுவலர்களுக்கு சாதகமான வகையில் அவர்கள் ஓய்வு பெறுவதற்கு சில நாட்கள் முன்னதாகவோ அல்லது ஓய்வு பெறும் நாளன்றோ பதவி உயர்வுக்கான அவரது முறை வருவதற்கு முன்பே பதவி உயர்வு வழங்கும் வகையில் செயற்கையாக காலி பணியிடங்களை ஏற்படுத்தக்கூடாது.

அதாவது விடுமுறையில் சென்று காலிப்பணியிடத்தை உருவாக்குவது, தற்காலிக பதவி உயர்வு வழங்குவது போன்ற செயல்கள் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story