நம்பி கோவிலில் உறியடி திருவிழா
திருக்குறுங்குடி நம்பி கோவிலில் உறியடி திருவிழா நடந்தது.
திருநெல்வேலி
ஏர்வாடி:
திருக்குறுங்குடி திருமலை நம்பி கோவிலில் உறியடி திருவிழா நேற்று நடந்தது. இதையொட்டி அதிகாலை முதலே கோவிலில் பக்தர்கள் குவிய தொடங்கினர். அவர்கள் கோவிலின் அருகில் ஓடும் நம்பியாற்றில் புனித நீராடினர். பின்னர் சுவாமிகளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டது. மாலையில் முக்கிய நிகழ்ச்சியான உறியடி உற்சவம் நடந்தது. இதில் நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, மதுரை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
அதனைதொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட கருட வாகனத்தில் திருமலை நம்பி எழுந்தருளி உலா வந்தார். உறியடி திருவிழா ஏற்பாடுகளை கண்ணன் சேவா சங்கத்தினர் செய்திருந்தனர். களக்காடு புலிகள் காப்பக வனத்துறையினரும், திருக்குறுங்குடி போலீசாரும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story