கொடைக்கானல் மலைப்பாதையில் வேரோடு மரங்கள் சாய்ந்தன


கொடைக்கானல் மலைப்பாதையில் வேரோடு மரங்கள் சாய்ந்தன
x

பழனி பகுதியில் தொடர்ந்து பெய்த மழைக்கு கொடைக்கானல் மலைப்பாதையில் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திண்டுக்கல்

மரங்கள் விழுந்தன

பழனி சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு முதல் சாரல் மழை பெய்த வண்ணம் இருந்தது.

தொடர் மழை காரணமாக இன்று அதிகாலை 5.30 மணி அளவில் பழனி-கொடைக்கானல் மலைப்பாதை தேக்கந்தோட்டம் பகுதியில் சாலையோரம் இருந்த 2 ராட்சத மரங்கள் வேரோடு சாய்ந்து சாலையின் குறுக்கே விழுந்தன.

போக்குவரத்து பாதிப்பு

இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாமல் அணிவகுத்து நின்றன. தகவலறிந்த நெடுஞ்சாலைத்துறையினர், தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் சாலையின் குறுக்கே விழுந்த மரங்கள் வெட்டி அப்புறப்படுத்தப்பட்டது. இதனால் அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறையினர் கூறுகையில், கொடைக்கானல் மலைப்பாதையில் தொடர் மழை பெய்து வருவதால் மண்சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண்டும். கூடுமானவரை இரவு நேர பயணத்தை தவிர்ப்பது நல்லது என்றனர்.


Next Story