சித்தலூர் பெரியநாயகி அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்


சித்தலூர் பெரியநாயகி அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
x
தினத்தந்தி 23 March 2023 12:15 AM IST (Updated: 23 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சித்தலூர் பெரியநாயகி அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது.

கள்ளக்குறிச்சி

தியாகதுருகம்,

தியாகதுருகம் அருகே சித்தலூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பெரியநாயகி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு மாதமும் அமாவாசை அன்று இரவு ஊஞ்சல் உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி பங்குனி மாத அமாவாசையான நேற்று முன்தினம் மூலவர் பெரியநாயகி அம்மனுக்கு பால், தயிர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட 21 வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு, மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அதன்பிறகு அம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து உற்சவர் பெரியநாயகி அம்மன் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு கோவிலை சுற்றி வலம் கொண்டு வரப்பட்டு, ஊஞ்சலில் அமரவைக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து நடைபெற்ற ஊஞ்சல் உற்சவத்தின்போது பூசாரிகள் பக்தி பாடல்களைப் பாடினர். அம்மன் ஊஞ்சலில் முன்னும் பின்னும் அசைந்தாடியபடி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் தியாகதுருகம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.


Next Story