டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் பயிற்சி பட்டறை


டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் பயிற்சி பட்டறை
x

திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் பயிற்சி பட்டறை நடந்தது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் கணினி பொறியியல் துறை சார்பில், 'ரியாக்ட் ஜே.எஸ்.' என்ற தலைப்பில் கல்லூரி மாணவர்களுக்கான பயிற்சி பட்டறை நேற்று நடந்தது. தொடக்க விழாவுக்கு கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி தலைமை தாங்கி, தகவல் தொழில் நுட்பத்துறையின் சிறப்புகள், அன்றாட வாழ்வில் இணையதளம், செயலிகளின் பயன்பாடுகள் குறித்து பேசினார். பேராசிரியை ஜெமி புளோரினாபெல் வரவேற்று பேசினார். பயிற்சி பட்டறையின் நோக்கம் குறித்து இணை பேராசிரியர் கேசவராஜா பேசினார்.

இணைய பயன்பாட்டிற்கான தலைசிறந்த மென்பொருளான 'ரியாக்ட் ஜே.எஸ்.' தொழில்நுட்பத்தை மாணவர்கள் அறிந்து கொள்ளும் நோக்கத்தோடு இப்பயிற்சி பட்டறை நடத்தப்பட்டது. இதன்மூலம் பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிவதற்கு தேவையான மென்பொருளான 'ரியாக்ட் ஜே.எஸ். அன்வான்ஸ்டு ஜாவா ஸ்கிரிப்ட் மற்றும் மாடுலார் பர்ட்டன்' உடன் சிறிய அளவிலான ஆராய்ச்சி திட்டம் செய்வதற்கும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. சோஹோ நிறுவன அதிகாரி எல்.நிவேதன் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார். இதில் பங்கேற்ற பொறியியல் கல்லூரி மாணவர்கள் 46 பேருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. கணினி துறை இணை பேராசிரியர் பவானி நன்றி கூறினார். ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி தலைமையில், கணினி துறை பேராசிரியர்கள் செய்து இருந்தனர்.


Next Story