தென்னை சாகுபடி குறித்து பயிற்சி


தென்னை சாகுபடி குறித்து பயிற்சி
x
தினத்தந்தி 12 Jan 2023 12:15 AM IST (Updated: 12 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தென்னை சாகுபடி குறித்து பயிற்சி

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

ஆழியாறு தென்னை ஆராய்ச்சி நிலையம் சார்பில் பொள்ளாச்சி அருகே நரிக்கல்பதியில் புதுடெல்லி வேளாண் ஆராய்ச்சி குழும ஒருங்கிணைந்த பணி திட்டத்தின் கீழ் பழங்குடியின தென்னை விவசாயிகளுக்கு தென்னை சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சி மற்றும் இடுப்பொருட்கள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் தென்னை ஆராய்ச்சி நிலைய தலைவர் சுரேஷ் தலைமை தாங்கி தென்னையில் தொழில்நுட்பங்கள் மற்றும் அதன் பயன்பாடு குறித்து பேசினார். தென்னையில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை குறித்து இணை பேராசிரியர் சீதாலட்சுமியும், ஒருங்கிணைந்த நோய் மேலாண்மை குறித்து இணை போராசிரியர் லதாவும், பூச்சி மேலாண்மை குறித்து இணை போராசிரியர் அருள்பிரகாசும் பேசினார்கள். மேலும் விழாவில் கலந்துகொண்ட பயனாளிகளுக்கு தென்னங்கன்றுகள், மண்புழு உரம், பேசில்லஸ் மற்றும் டிரைக்கோர் டெர்மா போன்ற உயிரி இடுபொருட்கள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை பேராசிரியர் மீனா மற்றும் உதவி அலுவலர்கள் வனிதா, நர்மதா ஆகியோர் செய்திருந்தனர்.


Next Story