பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி
எண்ணும் எழுத்தும் திட்டம் குறித்து பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
சுல்தான்பேட்டை
சுல்தான்பேட்டை ஒன்றியம் இடையர்பாளையம் அரசு மேல் நிலைப்பள்ளியில் எண்ணும் எழுத்தும் பயிற்சி வகுப்பறையில் ஏற்படும் இடர்பாடுகள் என்ற தலைப்பில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்புகள் வரை பாடம் எடுக்கும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர், ஆசிரியைகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில், வட்டார கல்வி அலுவலர் பிரான்ஸிஸ் சார்லஸ் வரவேற்றார்.
தலைமை ஆசிரியர்கள் பரமசிவம் (வலசுபாளையம்), வேல்முருகன் (கரையாம்பாளையம்) ஆகியோர் கலந்து கொண்டு ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தனர். இதில், 55 பள்ளிகளைச் சேர்ந்த அரசு மற்றும் அரசு உதவிபெறும் ஆசிரியர், ஆசிரியைகளுக்கு பயிற்சி அளிக்கபட்டது. கண்காணிப்பாளர்களாக வட்டார வளமையம் ஆசிரியர் பயிற்றுனர்கள் சங்கீதா, கார்த்திகேயன் செயல்பட்டனர். செயல்பாடுகள், உரையாடல்கள், கேள்விகள், விவாதங்கள் முறைகள் பயிற்சி வகுப்பில் கையாளப்பட்டது. முடிவில், இடையர்பாளையம் தலைமை ஆசிரியர் முருகேசன் நன்றி கூறினார்.