பழ பயிர்கள் சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி


பழ பயிர்கள் சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி
x
தினத்தந்தி 17 Dec 2022 10:03 PM IST (Updated: 17 Dec 2022 10:06 PM IST)
t-max-icont-min-icon

பெரியகுளம் அரசு தோட்டக்கலை கல்லூரியில் பழ பயிர்கள் சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

தேனி

பெரியகுளத்தில் உள்ள அரசு தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் மாநில சமச்சீர் வளர்ச்சி நிதி திட்டத்தின்கீழ் வறட்சிக்கேற்ற ஒருங்கிணைந்த பழப்பயிர்கள் சாகுபடி குறித்த பயிற்சி முகாம் மற்றும் வயல் விழா நடைபெற்றது. இந்த முகாமிற்கு கல்லூரி முதல்வர் ராஜாங்கம் தலைமை தாங்கி, சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர், மானவாரி வறட்சிக்கேற்ற பழப்பயிர் சாகுபடி முறைகள், ரகங்கள், திட்டத்தின் நோக்கம் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதில் திட்டத்தின் பங்கு குறித்து விரிவாக எடுத்துரைத்தார். இணை பேராசிரியர் முத்துராமலிங்கம், பழங்களின் ஊட்டச்சத்து, குடிநீர் பாசன அமைப்பு, இயற்கை வேளாண்மை மற்றும் அறுவடைக்கு பின் தொழில்நுட்பம் குறித்து விளக்கம் அளித்து பேசினார். தோட்டக்கலை உதவி இயக்குனர் ராஜ பிரியதர்ஷன், துறையின் திட்டங்கள் மற்றும் இடுபொருட்கள் வினியோகம் குறித்து பேசினார்.

இந்த பயிற்சியில் ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டனர். அவர்களுக்கு நாவல், கொடிக்காய்புளி, வில்வம் மற்றும் நெல்லி பழ நாற்றுகள் வழங்கப்பட்டது. அதன்பிறகு அறுவடை பற்றிய வயல்வெளி விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. பயிற்சி முடிவில் இளநிலை ஆராய்ச்சியாளர் தனலட்சுமி நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை தீபிகா செய்திருந்தார்.


Next Story