பாரம்பரிய உணவு திருவிழா


பாரம்பரிய உணவு திருவிழா
x

நாங்குநேரி யூனியன் அலுவலகத்தில் பாரம்பரிய உணவு திருவிழா நடந்தது.

திருநெல்வேலி

இட்டமொழி:

நாங்குநேரி யூனியன் அலுவலகத்தில் வட்டார அளவிலான பாரம்பரிய உணவு திருவிழா மற்றும் ஊட்டச்சத்து விழிப்புணர்வு போட்டிகள் நடைபெற்றன. நாங்குநேரி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் எஸ்.ஆரோக்கிய எட்வின் தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட திட்ட இயக்குனர் சுரேஷ், துணை இயக்குனர் சுமதி, ஒன்றிய கவுன்சிலர் நல்லாசிரியர் அகஸ்டின் கீதராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முருகன், கிஷோர்குமார் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள், பஞ்சாயத்து தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அனைத்து ஊராட்சிகளில் இருந்தும் மகளிர் சுய உதவிக்குழுவினர் பாரம்பரிய உணவுகளை தயாரித்தனர். சிறந்த குழுவினருக்கு பரிசு வழங்கப்பட்டது. மேலும் நாங்குநேரி யூனியன் ராமகிருஷ்ணாபுரம் ஊராட்சி தினையூரணி கிராமத்தில் 170 வீடுகளுக்கு ரூ.8 லட்சம் மதிப்பில் புதிய குடிநீர் இணைப்பு வழங்கும் பணியை நாங்குநேரி கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.ஆரோக்கிய எட்வின் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் பிரேமா, பஞ்சாயத்து தலைவர் வளர்மதி சேர்மத்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

* நாங்குநேரி யூனியன் இறைப்புவாரி ஊராட்சி பட்டர்புரம் கிராமத்தில் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் புதிய வாறுகால் அமைக்கும் பணி தொடக்க விழா நடைபெற்றது. நாங்குநேரி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் எஸ்.ஆரோக்கிய எட்வின் தலைமை தாங்கி, பணியை தொடங்கி வைத்தார். விழாவில் இறைப்புவாரி பஞ்சாயத்து தலைவர் மோகனா யோசுவா, துணைத்தலைவர் முத்துக்கிருஷ்ணன், வார்டு உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story